search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயங்கி விழுந்து சாவு"

    • கபிலர்மலை அருகே உள்ள செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள நாராயணமூர்த்தி என்பவரது வீட்டில் சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
    • அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ராமதேவம் ஊராட்சிக்கு உட்பட்ட வாழநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் கிருஷ்ணகுமார் (34) கட்டிட தொழிலாளி. இவர் நேற்று கபிலர்மலை அருகே உள்ள செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள நாராயணமூர்த்தி என்பவரது வீட்டில் சென்ட்ரிங் வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த அவருடன் வேலை பார்த்த சக தொழிலாளர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வர வைக்கப்பட்டு அவரை காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பரமத்தி போலீசில் புகார் செய்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் கிருஷ்ணகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாநகர ஆயுதப் படை போலீஸ் ஏட்டு திடீரென மயங்கி விழுந்தார்.
    • மருத்துவமனை செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் மாநகர ஆயுதப் படையில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் சின்னண்ணன் (வயது 40). இவர் லைன்மேடு போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை பணிக்கு வந்தவர் மதியம் 12.45 மணி அளவில் ஆயுதப்படை மைதானத்தில் சக காவலர்களுடன் பணியில் இருந்தார். அப்போது சின்னண்ணன் திடீரென மயங்கி சுருண்டு விழுந்தார்.

    இதைக் கண்ட சக காவலர்கள் உடனடியாக சின்னண்ணனை மீட்டு சேலம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சின்னண்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சின்னண்ணன் மனைவி கவுரி கொடுத்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இறந்து போன சின்னண்ணனுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் போலீஸ் மரியாதையுடன் இன்று சின்னண்ணன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. சின்னண்ணனுக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். 

    • டீ குடிக்க நடந்து சென்று கொண்டிருந்தபோது பரிதாபம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    தூசி:

    பீகார் மாநிலம் தானாசிகர் பாராஹாத்தாலுகா நாராயணபூர் அருகே உள்ள பக்பூல் கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு முர்மு (வயது 25). இவரது மனைவிஷம்மி (23). இருவரும் சிப்காட்டில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த னர். இதற்காக அருகே உள்ள சோழவ ரம் கிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை அஞ்சு முர்மு அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இது குறித்து புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்.

    • மூலிகை செடிகள் வியாபாரி மயங்கி விழுந்து பலியானார்.
    • அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    காஞ்சிபுரம் மாவட்டம் ஜல்லடியன் பட்டி பகுதியை சேர்ந்தவர் சுயம்பு (வயது61). இவர் மூலிகை செடிகளை வாங்கி வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்தார்.

    சுயம்பு தனது மனைவியை பிரிந்து வாழ்ந்தார். இதனால் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யில் உள்ள தங்கை புஷ்பவள்ளி வீட்டில் தங்கியி ருந்தார். இந்த நிலையில் மூலிகை செடிகள் வாங்கி வெளிமாநிலங்களுக்கு அனுப்புவதற்காக மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு வந்தார்.

    இதற்காக அவர் கடந்த 10 நாட்களாக திருமங்கலத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில் சோழவந்தான் சாலையில் உள்ள ஒருவரது தோட்டத்திற்கு நேற்று சென்ற சுயம்பு, திடீரென மயங்கி விழுந்தார்.சுயநினைவின்றி கிடந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தங்கை புஷ்பவள்ளி திருமங்கலம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து சுயம்பு உடல்நலம் பாதித்து இறந்தாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு மில் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார்.
    • 3 மணியளவில் குப்புற விழுந்த நிலையில் பேச்சு மூச்சின்றி கிடந்து ள்ளார்.

    ஈரோடு, 

    ஈரோடு அருகே உள்ள நாதகவுண்டம்பாளையம், ஆலுச்சாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (73). இவர், மோளகவுண்ட ம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு மில் ஒன்றில் தங்கி வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 2 நாள்களாக உடல் நிலை சரி இல்லை என கூறப்படுகிறது.

    இந்த நிலையில் மில்லுக்குள் சாம்பல் கொட்டும் இடத்தில் முத்துசாமி நேற்று மதியம் 3 மணியளவில் குப்புற விழுந்த நிலையில் பேச்சு மூச்சின்றி கிடந்து ள்ளார்.

    உடனடியாக அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே முத்துசாமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

    இது குறித்து, முத்துசாமியின் மகன் சக்திவேல் அளித்த புகாரின் பேரில் ஈரோடு தாலு கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தனியார் ஆஸ்பத்திரிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருந்து வாங்க சென்று உள்ளார்.
    • அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி பகவதியம்மாள் (வயது 65). இவர் சம்பவத்தன்று காலை 10.30 மணி அளவில் வீட்டில் இருந்து அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு உடல்நிலை சரியில்லாததால் மருந்து வாங்க சென்று உள்ளார்.

    இவர் கன்னியாகுமரி- நாகர்கோவில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது "திடீர்" என்று மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தகாயம் ஏற்பட்டது. உடனே அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றி பக்கத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ளஅரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கன்னியாகுமரி போலீசில் அவரது கணவர் முருகன் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    • மதுரை அருகே தபால்காரர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
    • இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    சிம்மக்கல் பேச்சியம்மன் படித்துறையை சேர்ந்தவர் தேவராஜன் (வயது57). இவர் பழைய குயவர்பாளையம் ரோட்டில் உள்ள தபால் அலுவலகத்தில் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கு உடல்நல பாதிப்பு இருந்தது. சம்பவத்தன்று பணியில் இருந்த தேவராஜன் திடீரென மயங்கி விழுந்தார். உடனே சக ஊழியர்கள் அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சண்முகபிரபு திடீரென மயங்கி கீழே விழுந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    கோபி கொளப்பலூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் 6 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இதையடுத்து ராஜே ஸ்வரி ஏற்கனவே திருமண மான ஈரோட்டை சேர்ந்த காய்கறி வியாபாரி சண்முக பிரபு (45) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டு கோபி கொளப்ப லூர் பகுதியில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் ராஜே ஸ்வரி டி.என்.பாளையம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள தங்கை வீட்டுக்கு கோவில் திருவிழா விற்காக குடும்பத்துடன் வந்து தங்கினார்.

    இந்நிலையியில் டி.என்.பாளையத்தில் ராஜேஸ்வரி யின் தங்கை வீட்டில் நேற்று காலை அவர் மற்றும் அவரது கணவர் சண்முக பிரபு குடும்பத்துடன் வாசலில் அமர்ந்து டீ குடித்து கொண்டு இருந்தனர்.

    அப்போது சண்முக பிரபுவுக்கு திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு அந்த பகுதியில் மயங்கி கீழே விழுந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி மற்றும் அவரது உறவினர்கள் சண்முக பிரபுவை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சண்முக பிரபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    போலீசாரின் விசாரணையில் சண்முகபிரபுவுக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மனு அளிக்க வந்த நிலையில் பரிதாபம்
    • 108 ஊழியர்கள் முதலுதவி அளித்தனர்

    வேலூர்:

    வேலூர் அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் மேஷக் (வயது 62). இவர் பெருமுகையில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் ஊழியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர். மேஷக் இன்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஊழியர்கள் மேஷாக்கிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    பின்னர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மேஷக் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தவர் மயங்கி விழுந்து இறந்தார்.
    • அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மருத்துவம் பார்ப்பதற்காக பிரசவ வார்டு அருகே உள்ள நோயாளிகள் காத்திருப்பு அறையில் உட்கார்ந்து இருந்தார். அப்போது அவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை ஊழியர்கள் மீட்டு வார்டில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு தீவிர உடல் நலபாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்தநிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் அரசு மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சுப்பிரமணி மனைவி தனலட்சுமி (57) புது மரக்கோணம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து வந்தார்.
    • மயங்கி விழுந்து இறந்தது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே பிண்ணணூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மனைவி தனலட்சுமி (57) புது மரக்கோணம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராக பணி புரிந்து வந்தார்.நேற்று பிற்பகல் தனலட்சுமி 5-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சக ஆசிரியர்கள் டாக்டரை வரவழைத்து பரிசோதனை செய்தனர்.தனலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இதனால் அந்த பள்ளியில் உள்ள ஆசியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தலை மையாசிரியை வகுப்பறை யில் மயங்கி விழுந்து இறந்தது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினர்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக பண்ணாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.
    • அப்போது திடீரென பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தார்.

    ஈரோடு:

    கோவை மாவட்டம் பேரூர் செட்டிபாளையம், போஸ்டல் காலனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (59). இவரது மனைவி பேச்சியம்மாள் (47). பாலகிருஷ்ணன் பேரூர் பச்சாபாளையத்தில் உள்ள ஆவினில் கணக்காளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் பாலகிருஷ்ணன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக சம்பவத்தன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார்.

    மதியம் சுமார் 2 மணியளவில் குடும்பத்தினர் பொங்கல் வைத்து கொண்டிருந்தபோது பூஜை பொருள்கள் வாங்குவதற்காக கோவிலுக்கு வெளியில் உள்ள கடைக்கு பாலகிருஷ்ணனும், அவரது மனைவியும் சென்றனர்.

    அப்போது திடீரென பாலகிருஷ்ணன் மயங்கி விழுந்தார். உனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே பாலகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×